search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப் அணி"

    டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது டெல்லி அணி. #IPL2019 #DCvKXIP
    ஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் கெயில் 69 ரன்னும், மன்தீப் சிங் 30 ரன்னும் எடுத்தனர். 
     
    டெல்லி அணி பந்து வீச்சாளர்கள் தரப்பில் சந்தீப் லமிச்சானே 3 விக்கெட்டும், அக்‌ஷர் பட்டேல் மற்றும் ரபடா ஆகியோர் 2 விக்கெட்டும் எடுத்தனர். 

    இதைத்தொடர்ந்து, டெல்லி அணி 164  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியொர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது பிரித்வி ஷா 11 ரன்னில் அவுட்டானார்.  அடுத்து தவானுடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர்.

    தவான் அரை சதமடித்து 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 6 ரன்னில் வெளியேறினார். ஐங்கிராம் 19 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்து அசத்தினார். இறுதியில் டெல்லி அணி 19.4. ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து பஞ்சாப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். #IPL2019 #DCvKXIP
    தேசிய சீனியர் கைப்பந்து போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வென்றது தமிழக அணி. #TamilNadu #Punjab #SeniorNationalVolleyball
    சென்னை:

    67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. போட்டியை சர்வதேச கைப்பந்து சம்மேளன செயல் துணைத்தலைவர் ஈசா ஹம்சா தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன், பொதுச் செயலாளர் ராம் அவதார்சிங் ஜாக்கர், வேலம்மாள் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி வேல்முருகன், எஸ்.ஆர்.எம். கல்வி குழும இயக்குனர் (விளையாட்டு) வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வருகிற 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 29 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் பங்கேற்றுள்ளன. இதன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ‘ஏ’, ‘பி’ பிரிவு ஆட்டம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும், பெண்களுக்கான ‘சி’, ‘டி’, ‘இ’, ‘எப்’ பிரிவு ஆட்டங்கள் மேடவாக்கத்தில் உள்ள வேலம்மாள் பள்ளி மைதானத்திலும், ஆண்களுக்கான ‘சி’, ‘டி’, ‘இ’, ‘எப்’ பிரிவு ஆட்டங்கள் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக் வளாகத்திலும் நடைபெறுகிறது.

    நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி, பஞ்சாப்பை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் தமிழக அணி 27-25, 25-21, 26-24 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

    பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ரெயில்வே அணி 25-13, 25-13, 25-7 என்ற நேர் செட் கணக்கில் அரியானாவை சாய்த்தது. #TamilNadu #Punjab #SeniorNationalVolleyball
    ×